Friday, December 30, 2016

Poetic Companion to Dummies' Guide. Part 3: Santha N.



பெண்களின் முன்னேற்றம்

by Santha N.


பெண்கள் நம் நாட்டின் கண்கள்.ஏன் இவ்உலகின்கண்கள்.
பெண்களை மதித்துமனப் புண்களை அழிப்போம்..

 உலகை ஆளப்பிறந்தவர்கள்
பெண்கள் என அவையம் அனைத்தும்
அறியச்செய்தவர்கள்..

இப்பூமியில் பிறக்கும் போதே
பெண்கள் புரட்சியாளராகவே பிறக்கிறார்கள்..
சாதனை, சரித்திரம் படைக்கவும்,
பூவும் புயல் வீசும் எனக்காட்டவும்,
விதையிட்ட இடத்திலே விருட்சமாகவும்,
விளக்கொளியில் மடியும்,
விட்டில் பூச்சிகளாக இல்லாமல்,
விடியலைத்தேடும், 
வின்மீன்களாகவுமே பிறக்கிறார்கள்..

பெண்ணடிமை பேணிய விஷவித்தகர்கள்
வீழ்ந்தொழிந்தனர் என, 
பார் உலகை ஆளவந்த பெண்களுக்கு,
புத்துணர்ச்சி தருவோம்..

 ஆடவரின் ஊனக்கண்களில் உள்ள,
துரும்பை அகற்றி,
ஆணுக்கு நிகர் பெண்களே என்ற,
மந்திரச்சொல் அறிவோம்..
ஆண் ஆதிக்கத்தை அகற்றிடுவோம்

ஏழு பருவ மங்கையரான பேதை, பெதும்பை, மங்கை,
மடந்தை, அரிவை, தெரிவை,பேரிளம்பெண் என அனைவரையும்
ஏற்றம் பெறச்செய்வோம்..

பெண்களுக்கு எதிரான வன்முறையே இனி இல்லை. பாதுகாப்பாக தான் இருக்கிறாள் என கூறுவது கூட ஆண் ஆதிக்கம் தான்

உலகில் உள்ள பெண்கள் அணைவரும் வன்முறை இல்லாமல் வாழ வழி வகுப்போம்.

----------

Part 1: Alamu R
Part 2: Michelle Ann James

No comments:

Post a Comment